கரிசல் காட்டு காதல் கதைகள்!
கரிசல் காட்டு காதல் கதைகள்!
பால்ய காலத்திருந்தே கதைகளைக் கேட்டு வளர்ந்திருக்கும் பாரததேவி தன் கதைகளின் ஊற்றுக்கண்ணாக தான் வாழ்ந்து வரும் கிராமத்தைக் குறிப்பிடுகிறார்.அங்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிலவி வரும் நேசத்தின் தட்ப வெப்பத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சொல்லப்பட்ட காதல் கதைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். களத்துமேடுகளில் கதிரறுக்கும் வயல்களில் களையெடுக்கும் தோட்டங்களில் உலவித் திரியும் இந்தக் கரிசல் காட்டுக் காதலுக்கு கொலுசுகளும் பூக்களும் காதல் தூது போகின்றன.இந்தக் காதல் கதைகளை படிக்கும் போது ஒவ்வொருவரும் காதலனாகிறோம்-காதலியாகிறோம்.கரிசல் காடுகளைக் கற்பனையில் சுற்றிவருகிறோம்.நாகரிகப் பூச்சற்ற வார்த்தைகள் ,வாழ்வனுபவத்தில் உயிர்தெழுந்த சொலவடைகள் ,பாசாங்கற்ற வர்ணனைகள் கொண்ட .இந்தக் காதல் கதைகளுக்குத் தங்கள் தூரிகைகள் மூலம் உயிரோவியம் கொடுத்து உலவவிட்டிருக்கிறார்கள் ஓவியர்கள் எஸ்.மாற்கு மற்றும் சேகர்.இந்தக் கதைகளைப் படிக்கும்போது உங்களை காதல் தன் மெல்லுணர்வுகளால் அரவணைக்கட்டும்...ஆளட்டும்!
கரிசல் காட்டு காதல் கதைகள்! - Product Reviews
No reviews available