கரசேவை

Price:
120.00
To order this product by phone : 73 73 73 77 42
கரசேவை
ப்ரதிபா ஜெயச்சந்திரன் என்கிற பெயர் நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே எனக்கு அறிமுகமாகி, என் உடன் பயணித்துவரும் பெயர்தான் என்றாலும் அப்பெயருக்குரிய மனிதரை நான் அறிந்திருக்கவில்லை. அவர் எழுதிய எதையும் கோர்வையாகப் படித்திருக்கவில்லையாதலால். மொத்தமாக இக்கதைகளை இப்போது வாசித்து முடித்ததும் இத்தனை நாளாய் வாசிக்காது இருந்துவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சி மேலிட்டது. சமீப காலத்தில் நான் வாசித்த சிறுகதைத்தொகுப்புகளில், சற்றும் சலிப்பூட்டாமல் புத்தம் புதுக் காற்றைச் சுவாசித்தது போன்ற மனநிறைவைத் தந்த தொகுப்பு இதுதான்.