கண்ணீரைப் பின் தொடர்தல்
கண்ணீரைப் பின் தொடர்தல்
சென்ற அரைநூற்றாண்டாகத் தமிழில் இந்திய இலக்கியங்கள் தொடர்ந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு அவற்றுக்கு மதிப்புரைகள் கூட வருவதில்லை. இந்நூலில் ஜெயமோகன் அவரது மனம் கவர்ந்த இருபத்திரண்டு நாவல்களை நுட்பமாகவும் விரிவாகவும் ஆராய்கிறார். வங்க நாவல்களான ஆரோக்கிய நிகேதனம் (தாராசங்கர் பானர்ஜி), பதேர்பாஞ்சாலி (விபூதிபூஷண் பந்த்யோபாத்யாயா), நீலகண்ட பறவையைத்தேடி (அதீன் பந்த்யோபாத்யாய), கன்னட நாவல்களான மண்ணும் மனிதரும் (சிவராம காரந்த்), ஒரு குடும்பம் சிதைகிறது (எஸ்.எல்.பைரப்பா), உருது நாவலான அக்னி நதி (குர் அதுல் ஐன் ஹைதர்), குஜராத்தி நாவலான வாழ்க்கை ஒரு நாடகம் (பன்னாலால் பட்டேல்) போன்றவற்றை உலகப் பேரிலக்கியங்கள் எதற்கும் நிகரானவை என ஒரு நல்ல வாசகன் சொல்வான்.இந்நூல்கள் பற்றிய ஆய்வுகள் வாசித்தவர்களுக்கு அவற்றின் நுட்பங்களைக் காட்டும், வாசிக்காதவர்களுக்கு அந்நூல்களின் சிறப்பை உணர்த்தும், நாவல்களை வாசிப்பது போன்றே உத்வேகத்துடன் வாசிக்கவைக்கும் மொழிநடை கொண்ட நூல் இது.
கண்ணீரைப் பின் தொடர்தல் - Product Reviews
No reviews available