கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப்போக...!

கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப்போக...!
சி.இராமலிங்கம் அவர்கள் எழுதியது.
ஆத்திகப் புரட்சி மனிதப் புறத்திலுள்ள முரண்பாட்டை மறைத்துவிடுகிறது. அதைவிட நாத்திகப் புரட்சி மனித அகத்தின் இயக்கத்தைச் சடத்தன்மை கொண்டதாக ஆக்கிவிடுகிறது. இரண்டிலுமே கோளாறு உண்டு. இரண்டையும் கணக்கில்கொண்டு தாண்டிச் செல்லவேண்டிய அவசியம் வந்துவிட்டது.தமிழக்ததைப் பொறுததவரை பெரியாரையும் இராமலிங்கரையும் சேர்த்தே பார்க்க வேண்டியது அவசியம். அதே சமயம் இருவரையும் கடந்த செலுத்துவதும் அவசியம். அப்படிக் கடந்து செல்லுகிறபோது கார்ல் மார்க்சும், அம்பேத்கரும், நடக்காகக் காத்திருப்பதைக் காணவியலும் . ஆத்திகர்கள், இராமலிங்கரை ஒரு தெய்வ அவதாரமாக வழிபடுவதைவி் அவர் வலியுறுத்திய சாதி சமய ம ஒழிப்பினைத் தங்களது வாழ்வில் அனுபவ சாத்தியமாக்க முயற்சிப்பதே இராமலிங்கருக்கு அவர்கள் செய்யும் வழிபாடக இருக்க முடியும். அவரே பிள்ளை விளையாட்டு என ஒதுக்கிய விளையாட்டைத் தொடர்ந்து விளையாடுவதில ஒரு பயனும் இல்லை. நாத்திகர்கள், இராமலிங்கரின் சாதி சமய ஒழிப்புக் கொள்கையை வைதட்து அவரை ஒரு பிராமண எதிர்ப்பாளராக முத்திரை இடுவதைவி்ட, அவரது ஜீவகாருண்யம் என்ற உயிர் இரக்கக் கொள்கையைத் தங்கள் வாழ்வில் அனுபவ சாத்தியமாக்க முயற்சிப்பதே இராமலிங்கர் போன்ற முனு்னோடிக்குச் செய்யும் மரியாதையாக இருக்க முடியும்.