கனவுகளின் கையெழுத்து

கனவுகளின் கையெழுத்து
'புதுக்கவிதைத் தாத்தா", திரைப் பாடலாசிரியர், பேராசிரியர், 'கவிநாயகம்' என்று பல்வேறு அடைமொழிகளால் உள்ளன்போடு தமிழ் உள்ளங்களில் உச்சரிக்கப்படுபவர்!
'ஆகாயத்துக்கு அடுத்த வீடு' என்ற படைப்பிற்காக இவருக்கு - மத்திய அரசு 'சாகித்திய அக்காடமி விருது (2006) வழங்கியது.
முதல்வர் கலைஞரிடமும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களிடமும் தமிழக அரசின் 'கலைமாமணி விருது' 'பாவேந்தர் பாரதிதாசன் விருது', 'கலை வித்தகர் கண்ணதாசன் விருது', 'கலைஞர் விருது' என விருதுகள் பல பெற்றவர்.
ஆளந்த விகடன் பொன்விழாவில் கலைஞர். நா.பா., அகிலன் மூவரும் தேர்ந்தெடுத்த இவரது சரித்திர நாவல் 'சோழ நிலா' - முதற் பரிசு பெற்றது. பல பல்கலைக் கழகங்களில் இவர் நூல்கள் - பாட நூல்கள். இவருடைய படைப்புகளில் ஆய்வு செய்து பன்னிரண்டுக்கும் மேற்பட்ட அறிஞர்கள் முனைவர் பட்டம் (Ph.D.) பெற்றுள்ளனர்.
இவருடைய முதல் கவிதைப் படைப்பான ‘கண்ணீர்ப் பூக்கள்' இதுவரை,35 பதிப்புகள் வெளியாகிச் சாதனை படைத்தது.நானூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். கதை, திரைக்கதை, வசனம். பாடல்களை எழுதி, நண்பர்களுடன் சேர்ந்து இவர் தயாரித்த திரைப்படம் - தென்றல் வரும் தெரு'.இந்தி, ஆங்கிலம். தெலுங்கு, மலையாளம், மராத்தி முதலிய பல மொழிகளில்
இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் பாடுகிறவர்; மனித நேயத்திற்காகவும் மத நல்லிணக்கத்திற்காகவும் போராடுகிறவர்!