காமராஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள்
காமராஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள்
அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் விரோதம் இருக்கக்கூடாது. கட்சி வேறுபாடுகள் கத்திக்குத்து வரை சென்றுவிடக்கூடாது. சிலர் படிக்காலேயே மேதை ஆகமுடியும். ஆனால் அனைவருமே மேதையாகவேண்டும் என்றால் படிக்கமாலேயே இருக்க வேண்டும் என்று பொருள் அல்ல. காமராஜர் படித்துப் பட்டம் பெறவில்லையே தவிர படிக்கவே இல்லை என்று பொருள் கொள்ளக்கூடாது. அவர் தனக்கு நேரம் கிடைக்கும் போதேல்லாம் படித்துக்கொண்டேதான் இருப்பார். என்னைப் போல நெருங்கிப் பழகியர்கள் தான் அவரது படிப்பார்வத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
காமராஜர் கல்லூரியில் படிக்கவில்லையே தவிர வாழ்க்கைப் பாடத்தைப் படித்தார். மக்களின் புன்னகையை, மக்களின் பெருமூச்சை, மக்களின் கண்ணீரையும் படித்துப் பாடம் பெற்றார். 30,40 வருடங்கள் மக்களிடம் ஒன்றி தொண்டாற்றியதனால் இந்தப் பாடத்தைப் பெறமுடிந்தது. ஒருவரின் பெருமையும், புகழும் அவர் உயிருடன் இருக்கும் போது தெரியாது. அவர் காலமான பின்தான் அவரைப் பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
காமராஜர் தமிழ் மக்களின் இதயங்களில் படமாக இருக்கிறார் என்பதை அறிவேன்.
-அறிஞர் அண்ணா
காமராஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள் - Product Reviews
No reviews available