கல்லில் வடித்த சொல் போலே
கல்லில் வடித்த சொல் போலே
``நான் கேட்பதில், படிப்பதில் எனக்கு நானறியாத ஒரு புது விஷயம் இருந்து கொண்டே இருக்கவேண்டும். வாசிப்பின் நோக்கம் அறிதல், தெளிதல் என்று என்னுள் எவ்வாறோ பதிந்து விட்டது. Reading for the pleasure of reading என்று பல சமயங்களில் பலவற்றை வாசித்தாலும், அந்த வாசிப்பு இன்பத்தோடு சேர்ந்து இது நாள் வரை நானறியாத ஒன்றை அல்லது நான் அறிந்தும் உணராத ஒன்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் படைப்புதான் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக ஆகிவிடுகிறது. அப்படியானது தான் கலாப்ரியாவின் கட்டுரைகள், சிறப்புரைகள், நேர்காணல்கள் எல்லாம் சேர்த்துத் தொகுத்த இந்த “கல்லில் வடித்த சொல் போலே” தொகுப்பு.
கலாப்ரியா, ஊரே பெருந்தெப்பத்தை ரசித்துக் கொண்டிருக்கும் போது தெப்பக்குளத்தின் கரையோரம் ஒதுங்கும் அழுக்குகளையும், கசடுகளையும் பார்த்துக் கொண்டிருப்பவர். புதுக் குரல்களை செவிமடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பவர். நினைவுகளின் தாழ்வாரத்தில் உலாவித் திரிபவர். இயற்கை வரைந்து காட்டும் சித்திரத்தை நின்று பார்ப்பவர். Always a poet, Even in prose என்ற சார்லஸ் பொதலேர் வழி நடப்பவர். தனது ஐம்பதாண்டு எழுத்து அனுபவத்தோடு. கல்லில் வடித்த சொல் போலே அவர் செதுக்கியவைதான் இந்தத் தொகுப்பு.
கல்லில் வடித்த சொல் போலே - Product Reviews
No reviews available