கள்ளக் கணக்கு

Price:
145.00
To order this product by phone : 73 73 73 77 42
கள்ளக் கணக்கு
பல்வேறு நாடுகளின் பண்பாட்டுப் பின்புலத்தில் எழுதப்பட்டிருக்கும் பதின்மூன்று சிறுகதைகள் அடங்கியது இத்தொகுப்பு. அறிவும் அனுபவமும் ஒன்றையொன்று நிறைவுசெய்யும் விதமாகப்
புனையப்பட்டிருக்கும் இக்கதைகளில் எழுத்தாளனுக்குரிய நுண்ணுணர்வோடு ஓர் அறிவியலாளனுக்குரிய கூர்நோக்கும் ஒருங்கே வெளிப்படுவதைக் காணலாம். இக்கதைகளினூடே மிக மெலிதாகத் தொனிக்கும் அங்கதம் மேலெழுந்தவாரியான நமது நாகரிக நடத்தைகளைப் பரிகசிக்கும் அதே வேளையில்,
ள்ளார்ந்த மனநெகிழ்வை மனிதாபிமானத்தை வலியுறுத்துவதாகவும் அமைந்திருக்கிறது.
சொல்லியவிதத்தால் புனைவின் வசீகரத்தைப் பெறும் அறிவியல் உண்மைகளை இத்தொகுப்பின் தனித்தன்மை எனச் சுட்டலாம்