கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
‘சதிலீலாவதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த ஒப்பற்ற பொக்கிஷம் என்.எஸ்.கிருஷ்ணன்! நாடக ஆசிரியர், நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவர் என்.எஸ்.கிருஷ்ணன். ‘சிரிப்புமேதை’, ‘வள்ளல்’, ‘கலைவாணர்’ என்றெல்லாம் மக்களால் புகழப்பட்டவர். தன்னுடைய மென்மையான நகைச்சுவையால், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளையும் பாகுபாடுகளையும் விமரிசனம் செய்த மேதை அவர். ‘என்.எஸ்.கே. நாடக சபா’ என்ற பெயரில் ஒரு நாடகக்குழுவை அமைத்து, அதில் கிடைத்த வருமானம் முழுவதையும் நலிந்த கலைஞர்களுக்காக உதவியது, நாடக உலகிலிருந்து திரைக்கு வந்து தமிழ் சினிமாவில் பல புதுமைகளைப் புகுத்தியது, ஒரு கொலைவழக்கில் சிக்கி வாழ்க்கையைத் தொலைத்தது, அழுதுகொண்டே மற்றவர்களைச் சிரிக்க வைத்தது _ இப்படி என்.எஸ்.கே.யின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சுவைபடத் தொகுத்து எழுதியுள்ளார் நூலாசிரியர் செவல்குளம் ‘ஆச்சா’. எளிய நடை, அரிய தகவல்கள் _ இதுதான் இந்த நூலின் சிறப்பு. என்.எஸ்.கே., பொதுவுடைமை சிந்தனையை வரவேற்றார்; ‘காந்தியக் கொள்கை இந்தியாவுக்கும், சுயமரியாதைக் கொள்கை தமிழ்நாட்டுக்கும் தேவை’ என்று கூறினார்.