கலை பொதுவிலிருந்தும் தனித்திருந்தும்

கலை பொதுவிலிருந்தும் தனித்திருந்தும்
கடந்த பத்தாண்டுகளில் கவனம் பெற்று வந்திருக்கும் கவிஞர் ஷங்காராமசுப்ரமணியன் தன் சம காலத்துக் கவிதைகள், கவிதைச் சூழ்நிலை, படித்த புத்தகங்கள், கண்டு நட்புகொண்ட இலக்கிய உலக ஆளுமைகள், இன்றைய எழுத்துலகச் சூழல் முதலான பல விஷயங்கள் குறித்து தன் எண்ணங்கள், கருத்துகளை இக்கட்டுரைகளில் பகிர்ந்துகொள்கிறார்.
கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலருக்கும் கருத்துக்கள் இருந்தாலும் அவற்றைச் சொல்லத் துணிந்தாலும் தன நலன் கருதி மெளனம் காத்து எழுதிக்கொள்ளும் சாமர்த்தியமே பரவிநிற்கும் சூழ்நிலையில், தன்கு தோன்றியதை தான் உணர்ந்ததை தயக்கமின்றி இக்கட்டுரைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
பிரமிள், நகுலன், விக்கிரமாதித்தன், சுந்தர ராமசாமி, தேவதேவன், மண்ட்டோ முதலான பல நம் காலத்து ஆளுமைகளைப் பற்றி அவருடைய அவதானிப்புகள் முக்கியமானவை. சமரசமற்று, உண்மை சார்ந்து சொல்லபடுபவையாதலால் ஷங்காராமசுப்ரமணியத்தின் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
கவிஞராக அறியப்பட்டிருக்கும் ஷங்காராமசுப்ரமணியத்தின் முதல் உரைநடைப் புத்தகம்.