கடவுளின் நாக்கு

கடவுளின் நாக்கு
இக்கட்டுரை தி இந்து நாளிதழில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடராக வந்து மிகுந்த பாராட்டினைப் பெற்றது.
உலகின் முதற் கதைசொல்லி கடவுள் என்கிறார்கள் பழங்குடி மக்கள். கடவுளின் நாக்கு தான் முதல் கதையை சொல்லியது எனவும் நம்புகிறார்கள் கடவுள் இந்த உலகை புரிந்து கொள்ளவும் நினைவு வைத்துக் கொள்ளவும் உலகை கதைகளாக உருமாற்றி சொல்லத் துவங்கினார். அக் கதைகளை கேட்டதன் காரணமாகவே மனிதனுக்கு நினைவாற்றல் உருவானது. அதன்பிறகு கடவுள் சொல்லிய கதைகளை மறக்காமல் மனிதர்கள் சொல்லி வரத்துவங்கினார்கள். அதனால் தான் தலைமுறை தலைமுறையாக இன்றும் கதை சொல்லப்படுகிறது என்றும் பழங்குடிகள் கருதுகிறார்கள்.
உலகெங்குமுள்ள நாட்டுபுறக்கதைகளையும் அதன் வழியே வாழ்க்கை மதிப்பீடுகளையும் எடுத்துச் சொல்கிறது கடவுளின் நாக்கு. அந்த வகையில் இதுவொரு கதைகளின் களஞ்சியம்.
தி இந்து நாளிதழில் தொடராக வெளிவந்து பெரும்பாராட்டினைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு.