கடைத்தெருவின் கலைஞன்

கடைத்தெருவின் கலைஞன்
ஆ.மாதவன் நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். நம்முடைய இயல்புவாத எழுத்தின் சாதனைகளில் ஒன்று அவரது புனைவுலம். கண்முண் நிகழும் அன்றாட யதார்த்தை அப்பட்டமாகச் சொல்லும் பாவனை கொண்ட இவ்வெழுத்து நம் சமூகப் பிரக்ஞைகளை ஓங்கி அறைந்து அதிரச்செய்திருக்கிறது. அடிப்படை வினாக்களை நோக்கி நம்மைச் செலுத்தியிருக்கிறது.
ஆ.மாதவன் திருவனந்தபுரம் சாலைத்தெருவை களமாகக் கொண்டு எழுதியவர். சாலைத்தெரு அவரது எழுத்தில் காமகுரோத மோகங்களின் கொத்தளிப்பு நிகழும் வாழ்க்கைவெளியாகவே ஆகிவிட்டிருக்கிறது.
ஆ.மாதவன் தமிழின் தேர்ந்த இலக்கியவாசகர் நடுவே எப்போதும் முக்கியமான படைப்பாளியாகவே கருதப்பட்டிருக்கிறார். ந.பிச்சமூர்த்தி முதல் வேதசகாயகுமார் வரை நான்க தலைமுறை எழுத்தாளர்களும் விமர்சகர்களும் அவரைக் கொண்டாடியிருக்கிறார்கள். முன்னோடிகளைக் கெளரவிப்பதற்காக உருவாக்கப்பட்ட விஷ்ணுபுரம் இலக்கிய விருது 2010 ஆ.மாதவனுக்கு வழங்கும் பொருட்டு இந்நூல் உருவாக்கப்பட்டது