காலம் அழிக்காத கதைகள்

Price:
180.00
To order this product by phone : 73 73 73 77 42
காலம் அழிக்காத கதைகள்
உலகெங்கும் மனித சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவை கதைகள். அவற்றில் காலத்தைக் கடந்து நிற்கும் கிளாசிக்குகள் ஏராளம். சமகாலத்திலும் அந்த கிளாசிக்குகளைப் போன்ற எழுத்துகள் தொடர்ந்து வெளிவந்தபடியே இருக்கின்றன. பல கிளாசிக் கதைகளைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், முழுக் கதை நமக்குத் தெரியாமல் இருக்கும். அந்தக் குறையைப் போக்க, தலைமுறைகளைத் தாண்டியும் சர்வ தேச அளவில் ரசிக்கப்படும் கதைகளின் சுருக்கத்தை சுவை குறையாமல் இந்நூல் சொல்கிறது. ராபின்ஹூட், ரெட் ரைடிங் ஹூட், சிண்டரல்லா, பைடு பைப்பர், ரிப்வான் விங்க்கிள், அற்புத விளக்கை அடைந்த அலாதின், ஹேன்சல் – கிரீட்டல் என்று எந்தப் பிரபலக் கதாபாத்திரத்தின் பெயர் உங்களுக்குத் தெரிந்திருந்தாலும் அவர்களின் கதையை இந்தப் புத்தகத்தில் நீங்கள் வாசிக்கலாம்.