ஜவ்வாது மலையில் பழங்குடி மருத்துவம்
ஜவ்வாது மலையில் பழங்குடி மருத்துவம்
உண்மையில் மருத்துவம் உடல்சார்ந்தது மட்டுமல்ல; பண்பாட்டையும் சார்ந்துள்ளது. பழங்குடி/இனக்குழு மருத்துவம் என்பது உடல், மனம், சுற்றுச்சூழல் ஆகிய அனைத்தையும் சமநிலையில் பேணுதலாகும். தமிழகத் தொல்குடிகள் பாரம்பரியமாகப் பின்பற்றும் மருத்துவம் இதன் அடிப்படையிலானது. முக்கியமாக மூலிகைகள் பற்றிய அறிவு அலாதியானது. அவற்றை அறிவார்ந்த முறையில் பயன்படுத்துகிறார்கள். சடங்குகள், விரதம், உடலை வருத்துதல், செய்வினை, மந்திரம், நடனம், பாட்டு. வருவதுரைத்தல் முதலான இன்னும் பல கூறுகளும் இனக்குழு மருத்துவத்தில் உள்ளன. இவை யாவும் வாய்மொழி மரபாக வருவது இதன் தனித்துவமாகும். இப்போதுதான் சில விடயங்கள் எழுத்து மரபாகி வருகிறது. ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் இத்தகைய பதிவுகள் வருங்காலப் பயன்பாட்டுக்குக் களஞ்சியமாக உருப்பெறும்.
முனைவர் கோவிந்தராஜ் ஓர் அகத்தாராக உருவாக்கியுள்ள ஜவ்வாது மலையில் பழங்குடி மருத்துவம் எனும் இந்நூல் தனிக் கவனத்துக்குரியது. புறத்தாரைவிட அகத்தாரே பண்பாட்டு நுட்பங்களை இனங்காண முடியும்.
முனைவர் பக்தவத்சல பாரதி
ஜவ்வாது மலையில் பழங்குடி மருத்துவம் - Product Reviews
No reviews available