இதய ரோஜா

0 reviews  

Author: இந்து சுந்தரேசன்

Category: வரலாற்று புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  350.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இதய ரோஜா

     சக்ரவர்த்தி ஜஹாங்கீருக்கும், மெஹ்ருன்னிஸாவிற்கும் இடையே இருந்த காதல். "இருபாதவது இல்லத்தரசி" ( The; Twentirth wife ) என்ற முதல் புத்தகத்தில் ஆரம்பித்து, இந்த "இதய ரோஜா" (The; Feast of Roses ) என்ற சுவாரசியமான இரண்டாவது நாவலிலும் தொடர்கிறது. ஜஹாங்கீரின் அந்தப்புரத்தில், அவரது இருபதாவதும், கடைசியுமான மனைவியாக, பர்ஷியாவிலிருந்து, அகதியாக இந்தியாவிற்கு வந்த கியாஸ்பெக்கின் அழகிய மகளாக மெஹ்ருன்னிஸா, தனது 34வது வயதில். அடியெடுத்து வைக்கிறாள். ஜஹாங்கீர்ின் இந்தத் திருமணம் காதலுக்காகவே செய்துகொள்ளப்பட்டது. மெஹ்ருன்னிஸா. அவர்கள் எதிர்காலத்தையே அடக்கி ஆள முடியுமோ என முகலாய பேரவை அங்கத்தினர்களுக்கு அச்சம் உண்டாகிறது. உண்மையும் அதுவே.

      வெகு சீக்கிரத்திலேயே முகலாய சாம்ராஜ்யத்தில் மிகுந்த செல்வாக்கும் , அதிகாரமும் உடையவளாகவும், அந்தப்புரத்தில் அவள் வருவதைத் தடுக்க பெரிய அளவு முயற்சி செய்த, ஜஹாங்கீன் பாட்ஷா பேகமான ஜகத்கோசினிக்கு ஒரு சவலாகவும் அவள் ஆகிறாள். முகத்திரைக்குப் பின்னிருந்தே அவள் சுமார் 18 வருட காலம் சாம்ராஜ்யத்தை ஆட்சி புரிகிறாள். அவள் தந்தை கியாஸ், சகோதரன் அபுல் மற்றும் இளவரசன் குர்ரம் இவர்களுடன் கூட்டணியாக இருந்து, பின்னர் அதில் பிளவும் ஏற்படுகிறது. தான் விரும்பியதை அடைய , தன் மகள் லாட்லியின் வாழ்க்கையையே பணயமாக வைக்கக் கூடத் தயாராகிறாள்.ஆனால் அவளுக்கு இத்தனை சக்தியை, செல்வாக்கைக் கொடுத்த மனிதனின் அன்பை, அளவற்ற காதலை அவள் கடைசி வரை இழக்கவேயில்லை.

       இது "இருபாதவது இல்லத்தரசி" என்ற சரித்திர நாவலின் தொடர் நாவலாகும்.

   இந்தியாவில் பிறந்து வளர்ந்த இந்து சுந்தரேசன் மேற் பட்ப்பிற்காக அமெரிக்க சென்று பின்னர் இங்கு ஸியாட்டில் நகரத்தில் வசித்து வருகிறார்.ஆங்கிலத்தில் "The Feast Of Roses " என்ற தலைப்பில் அவர் எழுதிய இரண்டாவது நாவல் இது. அவர் நான்கு சரித்திர நாவல்களும், நடப்பு காலத்தைச் சார்ந்த ஒரு சிறுகதை தொகுப்பும் வெளியுட்டுள்ளார்கள். அவர் வெளியீடுகள் சுமார் 22 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இதய ரோஜா - Product Reviews


No reviews available