இறைச்சிக்காடு

இறைச்சிக்காடு
வாழ்க்கை என்பது ஒரு போராட்டம். பலம் உள்ளவன் பலம் இல்லாதவன் மீது ஆதிக்கம் செலுத்துகிறான். போரட்டத்தில் தோல்வியுற்றவர்கள் அழிந்துவிடுவார்கள். பலவீனமானவர்கள் தங்களுடைய பாதுகாப்புக்காக ஒன்று சேருகிறார்கள். சிறிய மிருகங்கள் கூட்டம் கூட்டமாக திரிந்து பெரிய மிருகங்களுக்கு இரையாகாமல் வாழ்கின்றன. மனிதர்களுடைய வரலாற்றிலும், அதைக் காண்கிறோம். கோட்டைகள் மற்றும் ஆயுதப் படைகளை வைத்திருந்த அரசர்களை மக்கள் ஒன்று சேர்ந்து வீழ்த்தினார்கள். வறுமையை ஒழிப்பதற்கு புரட்சி அவசியம். புரட்சி செய்வதற்கு மக்கள் ஒன்று சேர வேண்டும்.
கண்ணுக்குத் தெரியாத சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் தொழிலாளி வர்க்கம் மீட்கப்படவேண்டும், லட்சக்கணக்கான மக்களை மூளைச் சலவை செய்துகொண்டிருக்கும் முதலாளித்துவ அமைப்புகள் மாற்றப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வுகள் ஊட்டப்படுகின்றன.தொழிலாளிகள் கடனிலிருந்து விடுபட்ட சேமிப்பில் ஈடுபடவேண்டும் என்ற உள்ளுணர்வு போதிக்கப்படுகிறது.
இந்நாவல் அமெரிக்கத் தொழிலாளர்கள் படும் அவஸ்தைகளைச் சித்தரிக்கிறது.