இன்டர்நெட் A to Z

இன்டர்நெட் A to Z
காம்கேர் கே.புவனேஸ்வரி அவர்கள் எழுதியது.
இன்டர்நெட்டில் கிடைக்காத தகவல்களே இல்லை எனலாம். அதற்காக இன்டர்நெட் தானாகவே உலக நடப்புகளைப் புரிந்துகொண்டு, செய்திகளை நமக்குக் கொடுப்பதாக அர்த்தம் கிடையாது. உலகத்தில் உள்ள பலகோடி மக்கள், தங்களது கருத்துக்களை எழுத்து வடிவத்திலும் படங்களாகவும் வீடியோ காட்சிகளாகவும் இன்டர்நெட்டில் பதிவுசெய்து வைத்திருப்பதால்தான் ஒரு கம்ப்யூட்டரில் இருந்து மற்றொரு கம்ப்யூட்டருக்கு தகவல்களை எளிதாகப் பரிமாற முடிகிறது. அதாவது தங்களிடம் உள்ள கம்ப்யூட்டரில் தங்களுக்குத் தெரிந்த தகவல்களைப் பதிவாக்கி வைப்பதால் உலகில் உள்ள கம்ப்யூட்டர்கள் இணையும் போது ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் வித்தியாசமான விதவிதமான செய்திகள், புதுப்புதுக் கருத்துகள், எழுச்சியூட்டும் தகவல்கள் உள்ளன. இப்படி உலக அளவில் உள்ள கம்ப்யூட்டர்களின் மிகப்பெரிய இணைப்பே இன்டர்நெட் எனப்படுகிறது. இன்டர்நெட் பற்றிய தொழில்நுட்பத் தகவல்களை விரல் நுனியில் வைப்பதற்கான வழிமுறைகள் உள்ளே, ஏராளமான படங்களுடன்.........