இன்னொரு வாசல் இன்னொரு வாழ்க்கை ( பாகம் 2 )
மனதைப் போன்று எதுவும் இல்லை அங்கு தொடர்ந்த செயல்பாடுகள் இடம் பெறும் எனவே மனதை தொடர் சிந்தனை என்று அழைப்பது பொருத்தம் ஏனெனில் ஒன்றன் பின் ஒன்றாய் தொடர்ந்து சிந்தனைகளின்செயல்பாடு இருந்து கொண்டே இருக்கும் இருசிந்தனைகளுக்கு இடைப்பட்ட இடைவெளியிலேயே சாட்சியாயிருப்பது எனும் இயல்பு தலைதூக்க இயலும் ஆனால் இடைவெளியிலே உணராத வகையில் சிந்தனைகள் வேகமாய் அமையும் ஆனால் அவ்வெண்ணங்களை சாட்சியாயிருந்து நோக்கத் துவங்குவோமெனில் சிந்தனை ஒட்டம் நிதானப்பட்டு எண்ணம் வருவதற்கு முன் இடைவெளி கிட்டும் அவ்விடைவெளியில் கவனிக்க இயலும் இடைவெளியின்றி சிந்தனைகள் இருக்க இயலாது அவ்வாறு இருந்தால் அவை ஒன்றோடோன்று மேற்கவியும் நமது விரல்களை போலவே எண்ணங்கள் இடைவெளியுடன் இருக்கும்...''