ஹோமியோபதி மருத்துவம் ஓர் அறிமுகம்

ஹோமியோபதி மருத்துவம் ஓர் அறிமுகம்
அலோபதியின் பக்க விளைவுகளையும் பின் விளைவுகளையும் கண்டு விரக்தியடைந்த ஜெர்மானிய டாக்டர் சாமுவேல்ஹானிமன் வி.ஞி அவர்களின் கண்டுபிடிப்பான ஹோமியோபதி மருத்துவம் மற்றும் வீட்டிலேயே வைத்து அவசரத்துக்குப் பயன்படுத்தத் தக்க ஹோமியோ மருந்துகளின் பட்டியலும் அவை பற்றிய குறிப்புகளு-மென ஒரு சரியான அறிமுகத்தை நமக்குத் தரும் புத்தகம் இது.பிற வைத்திய முறைகளில் மருந்து உட்கொண்டு இரைப்பைக்குச் சென்ற பிறகுதான் வேலை செய்ய ஆரம்பிக்கிறது.ஆனால் ஹோமியோபதியில் மருந்தின் மூலப்பொருள் நாவின் மிக நுட்பமான நரம்புத் தொகுதிகளின் வழியாக ஊடுறுவிச்சென்று துரிதமாகச் செயல்படத் துவங்குகிறது.ஹோமியோபதியிலே போனா ரொம்ப லேட்டாகுமே என்கிற மூடநம்பிக்கையை உடைத்துத் தகர்க்கும் பல அவசியமான தகவல்களை இப்புத்தகம் நமக்குத் தருகிறது.ஹோமியோபதியில் நோய்க்கு மருந்து தருவதில்லை.மாறாக நோயாளிக்கு அதாவது நோயாளியின் உடல் நல சரித்திரம்,அவரது மரபுக்கூறு,பழக்க வழக்கங்கள்,அவரது பசி,தூக்கம்,கழிவு,விருப்பு-வெறுப்பு,ஆசைகள்,கோபப்படும் விதம்,குடும்பச்சூழல் எனப் பலவற்றையும் முழுமையாகக் கணக்கில் கொண்டு நோயாளிக்கு மருந்து தரப்படுகிறது.வேறு மருத்துவத்துக்கே போகாதீர்கள் என்கிற அடிப்படைவாதம் இப்புத்தகத்தில் இல்லை.தேவைப்படும்போது சிறப்பு நிபுணர்களையும் பார்த்துக்கொண்டு அச்சிகிச்சையுடன் ஹோமியோ மருந்தையும் இணைத்துக் கொண்டால் விரைவில் நலம் பெறலாம் என்கிறது புத்தகம்.தவிரவும் லண்டனைச் சேர்ந்த டாக்டர் எட்வர்டு பேட்ச் அவர்களின் மலர் மருத்துவம் பற்றியும் லேசான அறிமுகத்தை இந்நூல் செய்கிறது.மிக முக்கியமாக ஒரு மருத்துவர¤ன் பார்வையிலிருந்து பேசாமல் பொருளாதாரத¢தில் மிகவும் பின்தங்கிய சாதாரண ஏழை மக்களின் மருத்துவத் தேவைகளைக் கணக்கில் கொண்டு இப்புத்தகம் பேசுகிறது