குருவைத் தேடி

குருவைத் தேடி
ஒரு கரு உங்களது குறுகிய எல்லையில் இருந்து எல்லையில்லாத பிரபஞ்சத்தை நோக்கி உங்களை இட்டுச் செல்பவர். எனவே தற்போது நீஙக்ள் என்னவாக இருக்கிறீர்களோ அது அவரது முன்னிலையில் இருக்கும்போது தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆட்படுகிறது. அப்படி இல்லாவிட்டால் அவர் உங்கள் குருவாக இருக்க முடியாது. ஒரு குரு இல்லாமல் ஆன்மீகத்தில் வளரமுடியுமா? நிச்சயமாக முடியும். ஆனால், வரையறுக்கபடாத ஒரு பாதையில் பயணிப்பதைவிட ஒரு வரைபடத்தைக் கொண்டு பயணிப்பது அறிவார்ந்த செயலாக இருக்குமென்று நான் நினைக்கிறேன். ஒரு குரு என்பவர் ஒரு வரைபடம்தான். அவர் ஒரு வாழ்கிற வரைபடம். உண்மையான குரு என்றுடம், போலியான குரு என்றும் எதுவும் கிடையாது. ஒருவர் குருவா? இல்லையா? என்பது மட்டும் உண்மையான வெளிச்சம் என்றும், போலியான வெளிச்சம் என்றும் இருக்கறிதா என்ன,அப்படி எதுவுமேயில்லை. விளக்கு,வெளிச்சத்தைத் தருகிறதென்றால் அது எப்படிப்பட்ட வெளிச்சமாக இருந்தாலும் பிரச்சனையில்லை. அது ஒரு மெழுகுவர்த்தியன் வெளிச்சமோ அல்லது ஒரு மின்விளக்கின் வெளிசசமோ அது இருளைப் போக்குகிறது என்றல் அது ஒரு வெளிச்சம்தான்.