கவர்னரின் ஹெலிகாப்டர்

கவர்னரின் ஹெலிகாப்டர்
ஒரு கட்டுரை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம் இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள். இதை சேர்த்தால் பல மாணயர்கள் பயன்டைவார்கள். கட்டுரை தொடங்கிய விதமும் அதை வளர்த்தெடுத்த தன்மையும். இறுதியில் எதிர்பாராத முடிவுக்கு கொண்டு வந்ததும் மறக்க முடியாத ஓர் அனுபவம்.
சில புத்தகங்களுக்குள் நுழைய முடியாது. அவற்றை படித்து முடிக்கவே முடியாது. வாசலிலே நிற்கும் பெரிய இரும்புக் கேட்டில் துருப்பிடித்த பூட்டு தொங்கும். நீங்கள் எவ்வளவு தட்டினாலும், கத்தினாலும் கேட்டு திறப்பதே இல்லை. கருணாவின் எழுத்து எதிரானது முதல் வார்த்தை. முதல் வசனம் படித்ததும் அப்படியே வசீகரித்துவிடும். உள்ளே நுழைவது தெரியாமல் நுழைந்து எழுத்தில் மூழ்கிவிடுவீர்கள்.
கதையின் போக்கை துல்லியமாக உணர்ந்து சரியான இடத்தில் முடிப்பது ஒரு கலை, கருணாவுக்கு அது பூரணமாகக் கைவந்திருக்கிறது.
முத்துலிங்கம்