கோபல்ல கிராமம்
கோபல்ல கிராமம்
.
கதை மாந்தர்களில் ஒருவர் நூலுக்குள்ளிருந்து வெளியேறி கோபல்ல கிராமத்தை வாசிக்க நேர்ந்தால் இந்த நூலின் ஒரு வரியும் ஒரு அம்சமும் அவருக்குப் புரியாமல் போகாது. தீவிர வாசகனுக்கான உள்ளோட்டமும் மேலோட்டமான வாசிப்புக்கு உகந்த எளிமையும் உள்ள ஆபூர்வமான வசீகரம் கொண்ட எழுத்து இது. வாசிப்பவனின் தோள்மீது கை போட்டுக்கொண்டு இயல்பான குரலில்
பேசும் எழுத்து. பேச்சு வழக்குக்கும் எழுத்து மொழிக்குமான இடைவெளியை மெல்ல மெல்ல அழித்துச் செல்லும் எழுத்து. எளிமையாகவும் நேரடியாகவும் கதை சொல்வதால், மொழியின் அழகிலும் லாகவத்திலும் சமரசம் செய்துகொள்வதில்லை கி.ரா.
90களின் ஆரம்பத்தில் தமிழில் வந்திறங்கிய சில இலக்கியக் கோட்பாடுகள் முன்வைத்த வாசிப்பின் இன்பம், மையமற்ற எழுத்து, நேர்கோட்டிலல்லாத எழுத்து போன்ற கருதுகோள்கள் இந்த நூலில் அதற்கு இருபது வருடத்துக்கு முன்பே செயல்பட்டிருக்கின்றன. சமூகவியல் பார்வையும் இலக்கிய விமர்சனமும் கூட்டாக இயங்கி உருவாக்கும் கோட்பாடுகளை விடவும் படைப்பாளியின் நுண்ணுணர் மேலாண்மை கொண்டது என்பதும் உறுதி செய்யப்படுகிறது.
கோபல்ல கிராமம் - Product Reviews
No reviews available