Google : தேடு
Google : தேடு
ஒரு ப்ராண்ட் மிகவும் பிரசித்தி பெறும்போது, அதன் பெயரே ஒரு காரியத்தைச் செய்யும் வினைச்சொல்லாக மாற்றப்படுகிறது. ஜெராக்ஸ் என்பது நகலெடுக்கும் இயந் திரம் செய்யும் ஒரு நிறுவனத்தின் பெயர். இன்றோ நகலெடுப்பதையே ஜெராக்ஸ் எடுப்பது என்று நாம் சொல்கிறோம். அதைப்போன்றே இண்டர்நெட்டில் ஒரு விஷயத்ந தத் தேடுவது என்பதையே கூகுள் செய்வது என்று சொல்லும் அளவுக்கு கூகுள் ஒரு புரட்சியைச் செய்துள்ளது. இந்த நிறுவனத்தை உருவாக்கியவர்கள் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கந லக்கழகத்தில் இருந்து தமது படிப்பை முடிக்காமல் வெளியேறிய இரண்டு மாணவர்கள்! லாரி பேஜ், செர்கி பிரின் எனும் இவ்விருவரின் புத்திக்கூர்மை, விடாமுயற்சி, உழைப்பு, கெட்டதைச் செய்யாதே எனும் வேதவாக்கு ஆகிய அனைத்தும் சேர்ந்து இன்று கூகு ளை அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றாகவும், இண்டர்நெட்டைப் பயன்படுத்த நினைக்கும் அனைவரும் பரிச்சயம் செய்து கொள்ளும் சேவையாகவும் மாற்றியுள்ளது. திருபாய் அம்பானி, நாராயண மூர்த்தி ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை சுவைபட எழுதிய சொக்கனின் சொக்கும் எழுத்தில் இந்தப் புத்தகம் படிப்போரைப் புது உலகுக்கு அழைத்துச் செல்லும். அந்த உலகில் அமெரிக்காவின் பல்கலைக்கழகங்கள் எவ்வாறு நடக்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்; அமெரிக்காவில் தொழில் முனைவர்கள் எவ்வாறு ஊக்குவிக்கப்படுகின்றனர் என்று புரிந்துகொள்ளலாம். மிகக் குறுகிய காலத்திலேயே முனைந்து செயலாற்றும் 30 வயதுக்கும் குறைவான சில இளைஞர்களால் உலகையே ஆட்டிப்படைக்க முடியும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
Google : தேடு - Product Reviews
No reviews available