கருட புராணம் (சுவாசம்)

கருட புராணம் (சுவாசம்)
அறிவிற் சிறந்த மகாத்மாக்களே! பூமியில் இருந்த போது நரகத்திற்கு அஞ்சி, நற்செயல்களைப்புரிந்தீர்கள், அதனால்தான் மானுடரான நீங்கள் தேவர்கள் ஆனீர்கள். கிடைத்தற்கரிய மானுடப்பிறவி எடுத்தும்கூட தேவர்கள் ஆவதற்கு முயற்சிக்காத வர்கள் நரகத்தில் விழுவார்கள். நீங்களோ நற்செயல் புரிந்து தேவர்கள் ஆவதற்கு முயற்சித்தீர்கள், பாவிகள், நிலையற்ற உடலை நிலையானது என்று பிரமையாக எண்ணி, பாவங்கள் செய்து. நரகத்தில் உழல்கின்றனர். நீங்களோ நிலைத்த சுகமான தேவநிலைக்காக, நிலையற்ற உடலுக்கான சுகங்களைத் துறந்தீர்கள், காலையில் சமைத்தால் மாலையில் பாழாய்ப் போகும் அன்னத்தைப் புசிக்கும் மானுட உடல் மட்டும் பாழாய்ப் போகாமல் இருக்குமா என்ன? அதனால் உடலோடு இருக்கும்போதே. கவளமாக நற்செயல் புரிந்து, தர்ம வழியில் நடந்து நரக வேதளையிலிருந்து காந்துக் கொள்ள வேண்டும். இறைவன் அளித்த புலன்கள், செல்வம், அறிவு அனைத்தையும் நற்செயல்களுக்காகப் பயன்படுத்தினீர்கள். அதனால் புண்ணியமான இந்த இடத்தை வந்தடைத்தீர்கள். நீங்கள் இன்னும் சிறந்த புண்ணிய லோகங்களுக்குச் செல்வீர்கள். வழியில் அனைவரும் உங்களை வழிபடுவார்கள்