இயக்குநர் சிகரம் கே.பி.

0 reviews  

Author: டி.வி.ராதாகிருஷ்ணன்

Category: வாழ்க்கை வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இயக்குநர் சிகரம் கே.பி.

தன்னிகரற்ற பல ஆளுமைகளை உருவாக்கிய பெருமை தமிழ் சினிமாவுக்கு உண்டு. அந்த ஆளுமைகளில் உயர்ந்து நிற்பவர் திரு. கே.பாலசந்தர். அந்த உயரத்தை, ‘இயக்குநர் சிகரம்’ என்ற பெருமையே உணர்த்தும். இதைச் சொல்லலாமா, மக்கள் ஏற்பார்களா என விளைவுகளைப் பற்றிய தயக்கமே இல்லாமல், படத்தின் வெற்றி - தோல்வி பற்றிய கவலை இல்லாமல், செயல்பட்ட உன்னதப் படைப்பாளி அவர். ‘‘நான் சொல்ல வருகிற விஷயம் இது... இதை என்னால் இப்படித்தான் உணர்த்த முடியும்’’ என முகத்தில் அறைந்தது போலக் கருத்து சொல்கிற கலை வித்தகர். அவரது பல படங்கள் காலத்தால் முந்தியவை. ‘நாளை இதெல்லாம் சகஜமான விஷயமாகிவிடும்’ என முன்பே கணித்த கதைக்காரர் அவர். அவர் அளவுக்கு தமிழ்க் குடும்பங்களின் சிக்கலான உறவு முடிச்சுகளை திரையில் கொண்டு வந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. பாசம் கொட்டுவது என்ற பெயரில் அழுகையால் திரையை நனைக்காமல், யதார்த்தமான உறவில் இருக்கும் கோபதாபங்களை அவரால் நமக்குள் கடத்த முடிந்தது. அவரது பெரும்பாலான படங்கள் நாடக மேடையிலிருந்து திரைக்கு வந்தவை. ஆனால் அவரது காட்சிப்படுத்தலில் எந்த நாடகத்தனத்தையும் பார்க்க முடியாது. நம் பக்கத்து வீட்டில் அன்றாடம் நிகழும் சம்பவங்களை ஒரு பார்வையாளனாக வேடிக்கை பார்ப்பதுபோல அவரது படங்களைப் பார்க்க முடியும். காதல், கோபம், ஆற்றாமை என உணர்வுகளின் உன்னதங்களை அவரது கதாபாத்திரங்கள் நம்மிடம் காட்டின. முதுமையைத் தொட்ட காலத்திலும் காதலின் இளமைப் பக்கங்களை அவர் காட்சிப்படுத்தினார். மனதை முதுமை தாக்கிவிடாமல் பார்த்துக்கொள்வது ஒரு சாமர்த்தியக் கலை. அது அவருக்குக் கைவந்திருந்தது. கே.பி.யின் படங்களின் வழியே அவரது மனதையும் காட்டுகிற ஒரு படைப்பாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது. அவரைப் போலவே நாடக மேடையில் நடமாடுகிற திரு டி.வி.ராதாகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். இது கே.பி.யின் நினைவுகளுக்கு ஒரு நூல் அஞ்சலி!

இயக்குநர் சிகரம் கே.பி. - Product Reviews


No reviews available