யூரோ டெக்

யூரோ டெக்
யூரோ டெக் - ஐரோப்பிய கண்டுபிடிப்புகளின் அன்றைய வரலாறும் இன்றைய வளர்ச்சியும், றின்னோஸா, ரூ 140
ஐரோப்பியர்கள் உலகுக்கு வழங்கிய முக்கியமான சில விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் அன்றைய தொடக்கத்தையும், காலப்போக்கில் அவை கண்ட மாற்றங்களையும், அவை இன்று தொட்டுள்ள உயரங்களையும், மனித சமூகத்தில் அவை ஏற்படுத்தியுள்ள பிரமிக்க வைக்கும் தாக்கங்களையும் பேசும் நூல்.
இந்தக் கட்டுரைகள் விகடன் வலைத்தளத்தில் தொடராக வெளிவந்து உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான வாசகர்களின் வாசிப்பையும் கவனத்தையும் ஈர்த்தது.
காம்பஸ், நீரோ மன்னனின் மரகதக் கல், ஆதி கால ஸ்டெதஸ்கோப், பிரெய்லியின் கதை எனப் பல சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகளை, அன்றும் இன்றும் என இரு பிரிவுகளாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.
இந்த நூலின் ஆசிரியர் றின்னோஸா, வரலாறு, சர்வதேச புவிசார் அரசியல், சூழலியல் உள்ளிட்ட பல தளங்களில் தொடர்ச்சியாகக் கட்டுரைகளையும் தொடர்களையும் எழுதி வருபவர். டென்மார்க்கில் குடும்பத்தோடு வசிக்கிறார்.