இரண்டு சகோதரர்களின் நெடும் பயணம்

Author: ஆர்கடி கைடர் தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப்
Category: சிறுவர் இலக்கியம்
Available - Shipped in 5-6 business days
இரண்டு சகோதரர்களின் நெடும் பயணம்
விடுமுறைக்கு அப்பா வீட்டுக்கு வருவார் என்று அம்மா காத்திருக்கிறாள். அப்பாவோ அவர் இருக்கும் இடத்திற்கு தமது புதல்வர்கள் இருவரையும் கூட்டிக் கொண்டு வருமாறு தந்தியொன்றை அனுப்பி வைக்கிறார்.
அப்பா இருப்பதொன்றும் அருகிலல்ல. ஆயிரக்கணக்கான கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள மலைகள் நிறைந்திருக்கும் காடொன்றுக்குள்தான் அவர் வசிக்கிறார். அந்தக் காட்டினுள்ளே கொடிய விலங்குகளும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக கடுமையான குளிர்காலம் அது.
சிறுவர்களான புதல்வர்கள் இருவரும் தம்மை அப்பாவிடம் கூட்டிக் கொண்டு போகுமாறு அம்மாவை வற்புறுத்துகிறார்கள். அம்மாவும் அதற்கிணங்கி அந்த நெடும்பயணத்துக்கு இசைகிறாள்.
கடைசியில் என்னதான் நடந்தது?
நூல் தேவைக்கு : 9092787854