எப்போதும் இன்புற்றிருக்க...
எப்போதும் இன்புற்றிருக்க...
என் நண்பர் ஒருவருடன் காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்வதுண்டு. அவர் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அந்த அடுக்ககத்தின் இரவுக்காவலர் யாராவது தென்பட்டால், தன் சட்டைப்பையில் கைவிட்டு ரூபாய் நோட்டு எது அகப்படுகிறதோ அதைக் கொடுத்து, தேநீர் சாப்பிடுங்கள் என்பார். பிறகு என்னிடம், இன்று காலையிலேயே நல்ல நினைவுடன் வாழ்க்கையைத் தொடங்குகிறேன். முழுநாளுமே மகிழ்ச்சியாக ஒளிரும் என்பார். ஒவ்வொரு நாளையும், அன்புடன் தொடங்குவதைக் காட்டிலும் இனிமையை வரவழைக்கும் உன்னதமான வழி வேறொன்றும் இருக்க முடியாது. அன்பை வெளிப்படுத்த மெனக்கெட்டு முதியோர் இல்லங்களுக்கும், கருணை இல்லங்களுக்கும் படையெடுக்க வேண்டுய அவசியமில்லை. நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் அன்புடன் நடந்துகொண்டாலே போதும். மேலாளர் - பணியாளர்களிடமும், முதலாளி - ஊழியர்களிடமும், மேஸ்திரி - சித்தாளிடமும் பொறுமையாகவும், கருணையுடனும் நடந்துகொண்டால் அதுவே போதும். உலகம் முழுவதுமே உவப்பானதாகிவிடும்.
எப்போதும் இன்புற்றிருக்க... - Product Reviews
No reviews available