என்ன இல்லை இந்து மதத்தில்?
என்ன இல்லை இந்து மதத்தில்?
கவிஞர் தெய்வச்சிலை அவர்கள் எழுதியது. இந்து மதம் எந்தவொரு மனிதராலும் தோற்றுவிக்கப்பட்டதில்லை!அது தானே தழைத்து மனிதகுல வாழ்க்கைக்கு தர்மமாய் -வழிகாட்டியாய் அனாதி காலம் தொட்டு மனிதனைப் பக்குவப்படித்திக் கொண்டிருக்கிறது.தேங்கிய குட்டை பாசி படிந்து மாசாகிப் போகும். ஓடுகிற நதி சுத்தமாக இருக்கும் .இந்துமதம் ஓடகிற நதி.அதனால் தான் இந்து மதம் நதிகளைப் புனிதமாகப் போற்றுகிறது.இந்து மதம் மனிதனுக்கு போதனை செய்கிற ஸ்தானமல்ல;வாழ்க்கை முறை!ஒவ்வொரு அசைவிலும் இயைந்து கலந்து கலாச்சார சாரமாய் விளங்குவது.மனித வாழ்வுக்கு தேவையான அனைத்தையும் தன்னகத்தே கொண்டது.இந்த ஒப்பற்ற சீரிய மதத்தின் மகத்துவத்தை கவிஞர் தெய்வச்சிலை அவர்கள் அழகுத் தமிழில் -எளிய நடையில் -தர்க்க வாதங்களோடு என்ன இல்லை இந்து மதத்தில்? என்ற நூலாக வடித்து தந்திருக்கிறார்.அவரது அரிய முயற்சியை நீங்கள் பாராட்டுவீர்கள் என்று நிச்சயமாக நம்புகிறோம்.
என்ன இல்லை இந்து மதத்தில்? - Product Reviews
No reviews available