எங்கிருந்து வருகுதுவோ

எங்கிருந்து வருகுதுவோ
சிரிப்பதற்கு பயப்படுகிறவர்கள் யாரேனும் இருப்பார்களா? குறைந்த பட்சம் நான் ஒருவன் இருக்கிறேன். இத்தனைக்கும் எனக்கு ஹாஸ்யம் ரொம்பப் பிடிக்கும். நானே பல ஹ்ஸ்யக் கதைகள் எழுதியிருக்கிறேன். சிரிப்பதற்கு பயப்படும்படி என்னை செய்தவர்கள் மூன்று பேர்.இருவர் லாரல், ஹார்டி என்ற இரட்டையர்கள். மற்றவர் பி.ஜி. உட்ஹவுஸ்.மேற்படி நபர்களிடம் நான் பயன்படுத்துவதற்கு காரணம் உண்டு. கோட்டுப் படங்கள் மட்டுமே பத்திரிகைகள் வந்து கொண்டிருந்த காலத்தில் ஓவியர் வர்ணம் .வாஷ் டிராயிங் என்ற புதுப் பாணியில் குமுதம் பத்திரிகைகளில் படங்கள் வரும். பெண்கள் வகைவகையான டிசைன்களில் புடவை ரவிக்கை அல்லது பாவாடை தாவணி அணிவார்கள். அதுபோலத் தைத்துத் தரும்படி பெண்கள் டெய்லரிடம் கேட்பார்களாம்... இந்தியாவில் பல மொழிகளிலும் பல பத்திரிகைகள் வெளியாகின்றன. ஆனால் அவை எதிலும் தமிழ்ப் பத்திரிகைகளில் தமிழ்ப் பத்திரிகைகளில் வருவதைப் போன்ற நகைச்சுவை துணுக்குகளைக் காண முடியாது. கார்ட்டூன் மேதை மாலி ஆனந்த விகடனில் 70 வருடங்களுக்கு முன்பாகவே இத்தகைய துணுக்குகளை ஆரம்பித்தார். அவர் கண்டுபிடித்த 2மேதைகள் ராஜீவும் கோபாலுவும் .முன் அட்டையிலேயே சித்தரத்துடன் சேர்ந்த நகைச்சுவைத் துணுக்கைப் பிரசுரித்து வந்த பெருமையும் ஆனந்த விகடனுக்கே...