எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது
எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது நாவலில் ஒரு முஸ்லிம் குடும்பத்தின் அகக் காட்சிகளை முன்வைத்து அந்தச் சமூகத்தை பற்றிய ஒரு உருவகத்தை வைக்கம் முகம்மது பஷீர் உருவாக்குகிறார்
இறந்த காலத்தின் நினைவுகளுடன் நிகழ்காலத்தை வாழப்பார்க்கிறது அந்தத் குடும்பம் வட்டனடிமைக் காக்காவுக்கு ஊர்ப்பிரமுகராக இருப்பதன் பெருமை மனைவி குஞ்ஞீத்தாச்சும்மாவுக்கு அவள் அப்பா யானை வளர்த்த காலம் பற்றிய பெருமை மகள் குஞ்ஞி பாத்துமாவுக்கு மணமகன் யானை மேல் வரும் கனவு இந்தத் பழம் பெருமைகளெல்லாம் கால மாற்றத்தில் கலைந்து போகின்றன தாத்தாவின் யானை கொம்பானையல்ல வெறும் குழியானைதான் என்று புதிய தலைமுறை கற்பிக்கிறது மூவரும்புதிய உலகத்தின் விதிகளுக்கும் நடைமுறைகளுக்கும் இணங்க நேர்கிறது
அரை நூற்றாண்டு கடந்தும் வாசகர்கள் போற்றி பாராட்டி வாசிக்கும் புனைக்கதையின் புதிய தமிழாக்கம்..