எனது நினைவுகள்
எனது நினைவுகள்
கோவை அ.அய்யாமுத்து அவர்கள் எழுதியது.
கேட்டீர்களா? தலைவர் அவர்களே! கூடியுள்ள பிரமுகர்களே! சுயமரியாதை இயக்கத் தோழர்களே! இதோ இங்கொரு தீண்டப்படாத சகோதரன் நாவறட்சியால் சாகும் நிலையில் தவிக்கிறான். சாதித் திமிர்பிடித்த மக்கள் அவனைக் குளத்திலும் கிணற்றிலும் தண்ணீர் மொள்ள விடுவதில்லை. நூற்றைம்பது வருடங்களாக அந்நியன் நமது கைகளில் பூட்டிய விலங்கினைத் தறித்துக் கொண்டிருக்கிறோம். அவ்விலங்கு உடைபடு முன்னர், நாம் இந்தத் தீண்டப்படாத மகனுக்குப் பூட்டியிருக்கும் விலங்கைத் தகர்த்தெறிய வேண்டாமா?
அவ்வாறு செய்யாதிருத்தல் நீதியா? தர்மமா? நியாயந்தானே? சுயராஜ்யம் மேல் சாதிக்காரர்களுக்கு மட்டுந்தானா?
எழுந்திருங்கள்! நாம்முதலில் குளத்துக்குச் செல்வோம். இப்பஞ்சை மனிதன் தண்ணீரை அள்ளி அள்ளிக் குடிக்க வைப்போம். பின்னர் அவனையுன் அழைத்துக்கொண்டு வெள்ளையனையும் இந்த நாட்டை விட்டு விரட்டியடிக்கப் புறப்படுவோம்.
தோழர் ஜீவானந்தம் அவர்களே உங்கள் தீர்மானத்தைக் கொஞ்சம் பென்டிங்கில் வைத்துவிட்டு என்னோடு வாருங்கள். நாம் முதலில் குடி தண்ணீர் போராட்டத்தைத் தொடங்குவோம். அதன் பின்னர் உப்புக் போராட்டத்துள் நுழைவோம் என்று கூறி என் ஆசனத்திலமர்ந்தேன் கொட்டகையே அதிரும்படியான ஆரவாராம் எழுந்தது.
எனது நினைவுகள் - Product Reviews
No reviews available