என் இளமைக்கால நினைவுகள்
“வாழ்க்கையில் ஆரம்பத்தில் இருந்தே நான் தையரியத்துடன் இருப்பதற்கோ அல்லது புத்திசாலித் தனம் மற்றும் புத்திக்கூர்மையுடன்இருப்பதற்கோ எதையும் செய்யவில்லை. மேலும் அதை தைரியம் என்றோ அல்லது புத்திக்கூர்மை என்றோ நான் ஒரு போதும் நினைத்தது கிடையாது. போகப்போக பின்னாளில்தான் மக்கள் எப்படி முட்டாளாக இருக்கிறார்கள் என்பதை நான் தெரிந்து கொண்டேன். அது எனக்கு பின்னாளில் வந்த பிரதிபலிப்புதான். ஆரம்பத்தில் நான் தைரியசாலி என்று எனக்கு தெரியாது. எல்லாரும் இதுபோன்றுதான் இருப்பார்கள் என்று நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் பிறகு மட்டுமே எல்லா மனிதர்களும் ஒரே போன்று இருப்பதில்லை என்பது எனக்குத் தெளிவாகியது.“