எல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர்

எல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து இன்றும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறது.மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் இருந்து அவருடைய நடிப்பத் திறமையையும் தொழில்நுட்பப் பார்வையையும் வித்தியாசமான நோக்கில் கண்டு வெளிப்படுத்தியுள்ளார் இந்நூலாசிரியர். இரட்டை வேடக் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் நடிக்கும்போது எப்படியெல்லாம் எம்.ஜி.ஆர்.தனக்கேயுரிய பாணியில் தனிப்பட்ட யுக்திகளைக் கையாண்டார் எப்படி தனது நடிப்பில் நவரச நடிப்பினை வெளிப்படுத்தினார் என்பதை திரைப்படக் காட்சிகளின் வர்ணனைகளோடு ஆசிரியர் அழகாகத் தொகுத்துள்ளார். விமர்சனப் பாங்கில் இல்லாமல் ஒரு ரசிகனாக அமர்ந்து எம்.ஜி.ஆரின் திரைப்படங்களை அணு அணுவாக ரசித்துப் பார்க்கும் ரசனைக்கலையை இந்த நூல் வெளிப்படுத்துகிறது. திரைப்படங்கள் மட்டுமில்லாமல் , எம்.ஜி.ஆர் தன் சொந்த வாழ்க்கையில் சந்தித்த இடர்ப்பாடுகள் , சோதனைகள் என்னென்ன, அவற்றை அவர் எப்படி எதிர்கொணடு வாழ்க்கையில் யாரும் தொடமுடியாது சிகரத்தை எட்டினார் போன்றவற்றையும் இந்த நூலில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.