பதினொரு நிமிடங்கள்

பதினொரு நிமிடங்கள்
பிரேஸிலிய நாவலாசிரியர் பாவ்லோ கோலோ 2003-ல், மரியா எனும் இளம் விலைமகளின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதிய நாவலே பதினொரு நிமிடங்கள். அறியாத வயதில் ஏற்படும் மரியாவின் முதல் காதல் அவளது இதயம் நொறுங்கக் காரணமாகிறது. இளம்வயதில், உண்மையான காதலைத் தான் சந்திக்கவே போவதில்லை என்ற முடிவுக்கு வரும் அவள், “ காதல் நம்மை வேதனைக்கு ஆளாக்கும் பயங்கரமான விஷயம்…” என்று நம்பத் தொடங்குகிறாள். ரியோவில் ஒரு சந்திப்பின் மூலம் ஏற்படும் வாய்ப்பு அவளை ஜெனீவாவுக்கு இட்டுச் செல்கிறமு. புகழையும் செல்வத்தையும் கனவு கண்ட அவள் விலைமகளாய் வேலை பார்ப்பதில் சென்று முடிகிறது.
மரியா காதலிலிருந்து விலகிச் செல்ல செல்ல, அவளுக்கு பாலுணார்வின் மீது ஒரு கவர்ச்சி வந்துசேர்கிறது.ஆனால் அழகான, இளம் ஓவியரை அவள் சந்திக்க நேரும்போது, பாலுணர்வு இன்பத்திற்காக இருண்ட பாதையைப் பின்தொடர்வதா அல்லது புனிதமான பாலுறவைக் கண்டடையும் வாய்ப்புக்காக அனைத்தையும் இழக்கத் துணிவதா என்ற நெருக்கடியில் வந்து நிற்கிறாள். பாலுணர்வின் பின்னணியில் காதல். பதினொரு நிமிடங்கள், உணர்ச்சிபூர்வமாக காதல் மற்றும் பாலுணர்ச்சியின் புனிதமான தன்மையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும், கவனத்தை ஈர்க்கும் துணிகரமான ஒரு நாவல். நமது சொந்த முன்னனுமானங்களை எதிர்கொள்ளவும் நமது உள் ஒளியை தழுவிக்கொள்ளவும் அழைக்கிறது.