ஈழத் தமிழ் எழுத்தாளர்கள்

ஈழத் தமிழ் எழுத்தாளர்கள்
அரை நூற்றாண்டு காலம் மூடிக்கிடந்த செவிகள் மெல்ல திறந்து உள்ளன. எண்ணற்ற தலைமுறைகளாக, ஈழம் பேணி வந்த தமிழர் நாகரிகம், சிங்கள இனவாதத்தின் கோரப்பிடியில் சிதைக்கப்படும் நாட்களில், ஈழத்தின் வாழ்வு இன்று வதைபடும் நிலைமையில், அந்த மண் படைப்பாளியகளின் எழுதுகோள் மூலம் மனித குலத்தின் உதவியைத் தேடுகின்றன.
தாய்த் தமிழகத்து எழுத்தாளர்களை, தமிழ் ஈழம் போற்றியதே! வரவேற்றதே! குதுகலித்து கொண்டாடியதே! ஆனால், ஈழத்து எழுத்தாளர்களை, புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களை தமிழகம் ஏன் பற்றிக்கொள்ளவில்லை.?
துன்பத்தின் பிடியில் பரிதவிக்கும் ஈழத்துப் படைப்பாளிகளுக்கு உரிய அங்கீகாரத்தையும், ஆதரவையும் தர வேண்டிய கடமையில், தாய்த் தமிழகம் தவறிவிட்டது என்பது உண்மைதான்...
ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் கருவூலங்களைத் தேடித்தேடிஅவற்றை அறிவதிலும், அனைவரும் அறிய வேண்டுமே என்று ஆசைப்படுவதும் ஆருயிர்த்தம்பி அருணகிரிநாதனின் உடன்பிறந்த குணம்.