இலங்கையின் இனவரைவியலும் மானுடவியலும்
இலங்கையின் இனவரைவியலும் மானுடவியலும்
இலங்கையின் இனவரையியலும் மானிடவியலும் என்னும் பொதுத் தலைப்பில் பதினைந்து கட்டுரைக்களைத் தாங்கிவரும் இந்நூல் இலங்கையின் சிங்கள தமிழ்ச் சமூகங்களின் சாதிக்கட்டமைப்பு பற்றிச் சமூகவியல், மானிடவியல் அடிப்படையில் விரிவாக எடுத்துரைக்கிறது. இலங்கையின் தென்பகுதிக் கரையோர மாகாணங்களினதும் கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம் ஆகிய பகுதிகளினதும் சாதியமைப்பை ஒப்பீட்டு முறையில் புரிந்துகொள்ள இந்நூல் துணைசெய்கிறது.
மேற்கு நாட்டு ஆய்வாளர்களான நூர் யல்மன், பிறைஸ் றயான், ஒட்வார் ஹோலப், மைக்கல் பாங்ஸ், மக் ஜில்வ்ரே, ஜனிஸ் ஜிஜின்ஸ், றொபேர்ட் ஹோம்ஸ் ஆகியோராலும் மைக்கேல் றோபர்ட்ஸ், ஏ. ஜே. வில்சன், நியூட்டன் குணசிங்க ஆகிய இலங்கையின் அறிஞர்களாலும் எழுதப்பட்ட ஆய்வு நூல்களிலிருந்தும் கட்டுரைகளிலிருந்தும் கருத்துகளைத் தொகுத்தும், சுருக்கியும், தழுவியும் தமிழில் தருவதோடு சில முக்கிய கோட்பாடுகளையும் எண்ணக்கருத்துகளையும் இந்நூலாசிரியர் விமர்சன நோக்கில் தெளிவுற எடுத்துக் கூறுகிறார். தமிழில் சமூகவியல், இனவரையியல், மானிடவியல் துறைகள் சார்ந்த அறிவிலக்கியத்திற்கு இந்நூல் ஒரு அரிய பங்களிப்பு என்பதில் ஐயமில்லை.
இலங்கையின் இனவரைவியலும் மானுடவியலும் - Product Reviews
No reviews available