இடக்கை

இடக்கை
நீதி மறுக்கப்பட்ட மனிதனின் துயரக்குரலே இடக்கை, ஔரங்கசீப்பின் கடைசி நாட்களில் துவங்கி மத்திய இந்தியாவின் சத்கரில் சஞ்சரிக்கிறது நாவல்.
நீதிக்குக் காத்திருப்பது என்பது தனிநபரின் பிரச்சனை மட்டுமில்லை, தேசமும் தனக்கான நீதிக்காக காத்துக் கொண்டுதானிருக்கிறது. எவருக்கும் நீதி கிடைப்பது எளிதாகயில்லை. நீண்ட காத்திருப்பும், தேவையற்ற இழுத்தடிப்புகளும், முடிவில்லாத விசாரணையும், நீதி பெறுவதை பெரும் போராட்டமாக்கியிருக்கிறது.
நீதிக்காக காத்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் தனக்கான நீதி கிடைத்துவிடும் என உறுதியாக நம்புகிறான், அந்த நம்பிக்கை பொய்த்துப் போகும் போது கூட அவன் மனம் தளர்வதில்லை, இன்னொரு இடத்தில் தனக்கான நீதி கிடைக்க கூடும் எனத் தேடிச் செல்கிறான்.
அநீதியின் குரூரத்தையும் அறிவீனத்தையும் இந்திய இலக்கியங்கள் எப்போதுமே அடையாளம் காட்டி வந்திருக்கின்றன. அவ்வரிசையில் நீதி கிடைக்காத மனிதனின் அவல வாழ்வினைப் பேசுகிறது இடக்கை.