சின்ன ஐடியா பெரிய லாபம்!

சின்ன ஐடியா பெரிய லாபம்!
இன்றைய பெண்களுக்கு பொருளாதார ரீதியான அறிவு அதிகம்.வீட்டில் பட்ஜெட் போடும் தெளிவு போதுமே நம் திறமையை சொல்ல!காய்கறிகாரனிடமும் ,பூக்காரியிடமும் பேரம் மிச்சப்படுத்தும் நம் திறமையை இன்னும் புத்திசாலித்தனமான வழிகளில் பயன்படுத்தினால் தினம் தினம் ராஜலட்சுமி நம் வீட்டுக் கதவைத் தட்ட ஆரம்பத்து விடுவாள்!அதற்கு என்ன செய்வது?சேமிப்பை முதிலீடு ஆக்க வேண்டும்.முதலீடு பிஸினஸ் மாதிரியான பெரிய விவகாரம் பற்றி நமக்கென்ன தெரியும்?என்று திகைக்காதீர்கள்.எந்த ஒரு விஷயத்திலுமே அடிப்படையாக ஆர்வம் என்று ஒன்று இருக்கவேண்டும்.அதோடு மற்றவர் சொல்வதை காது கொடுத்துக் கேட்கத் தொடங்கினால் ,நமக்குத் தெரியாத பல தகவல்களை சுலபமாக அறிந்த கொள்ளலாம் .அந்த வகையில் இந்தப் புத்தகத்தில் பயனுள்ள பல சின்ன ஜடியா க்களை அறிந்த கொண்டு உங்களுக்குப் பொருத்தமான தொழிலைத் தொடங்கினால் பெரிய லாபம் அடைவது உறுதி!