சீனா விலகும் திரை

சீனா விலகும் திரை
பல்லவி அய்யர் அவர்கள் எழுதியது. நீங்கள் இந்தியாவில் வசிக்க விரும்புகிறீர்களா அல்லது சீனாவிலா?ஏழையாக இருந்தால் கீனாவில் தான் வசிப்பேன்.கொஞ்சம் வசதமி வாய்ப்பு இருந்தால்,இந்தியாவில் தான்.கட்டுப்பாடு ,குழப்பம் ,புதுமை, பழமை ,வறுமை, வெல்வம்,நல்லது, கெட்டது ,எல்லாம் கலந்து புகையும் வெடி மருந்து தான் சீனா.இந்தியாவிடமிருந்து சீனாவும் ,சீனாவிடம் இருந்து இந்தியாவும் கற்றுக் கொள்ளவேண்டிய விஷயம் நிறைய உண்டு.ஒன்றின் பலம் ,மற்றொன்றின் பலவீனம்.இங்கே ஜனநாயகம் உண்டு.ஆனால் ,மோசமான ஆட்சிமுறை.சீனாவில் ஜனநாயகத்தை பலியிட்ட பிறகு தான் முன்னேற்றங்கள் சாத்தியமாகியிருக்கின்றன.தி ஹந்து பத்திரிகையின் நிருபராக பணியாற்றிய பல்லவி அய்யர் சீனாவின் இதயத்துடிப்பை ஐந்து ஆண்டு காலம் அருகில் இருந்து கவனித்து நேரடி அனுபவங்களின் மூலம் இந்நூலை உருவாக்கியிருக்கிறார்.ஓரு பயண நூலாக மட்டும் இல்லாமல் சமகால சீனாவின் சரித்திரம் ,அரசியல்,கலாச்சாரம்,சாதனைகள்,சவால்கள்,சர்ச்சைகள்,என்று பலவற்றை படம்பிடிக்கும் இந்நூல் இரண்டு நாடுகளையும் ஒப்பிட்டு புதிய வெளிச்சங்களை அளிக்கிறது.