சிச்சுப்புறா

சிச்சுப்புறா
தமிழில் சுகானா
கேரளாவின் இளம் நாவலிஸ்டான அல்கா தன்னுடைய படைப்பின் மூலம் மலையாள மனோரமா, வனிதா, மங்களம், தீபிகா, மலையாளம் நியூஸ், மாத்ரு பூமி கேரள கௌமுதி என கேரளாவின் ஒட்டு மொத்த மீடியாவையும் தன்னை கவனிக்க வைத்திருக்கிறாள். கேரளா மட்டுமின்றி இந்தியா டுடே, இந்தியன் எக்ஸ்பிரஸ் என ஆங்கில இதழ்களும் அல்காவைப் பாராட்டத் தவறவில்லை. ஒரு பன்னிரண்டு வயது குழந்தையால் எழுதப்பட்ட உலகின் முதல் குழந்தைகளுக்கான நாவல் சிச்சுப்புறா
அம்மா கே.வி.ஜெயஸ்ரீ, அப்பா உத்ரகுமாரன். சித்தி கே.வி. ஷைலஜா, சித்தப்பா பவாசெல்லதுரையென எழுத்தாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் நிறைந்த குடும்பச் சூழல், இலக்கியப் பரிச்சயமும், வாசிப்பும் இவரை அடுத்த இடத்திற்கு நகர்த்த, தன் 13 வயது வயதில் 'எதிர்பாராமல் பெய்த மழை'' என்ற கதைத் தொகுப்பின் மூலம் மொழிபெயர்ப்பாளராக இலக்கிய உலகிற்கு அறிமுகம். இப்போது பொறியியலில் கட்டிடவியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவி.