பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்
3ஆம் உலக நாடுகளைச் சிதைக்க உளவாளிகள் நடத்திய சதி குறித்த ஆவணம்
இதை அரசியலாலும் பண்பாட்டாலும் உலகளாவிய அளவில் விரைந்து ஐக்கியப்படும் சமூகங்களைக் கண்டறிவதில் தொடங்கி, அந்தச் சமூகத்தின் நம்பிக்கையிலும் பண்பாட்டிலும் வஹாபியிஸம், ஷியா, சன்னி, குஃபியிஸம் எனப் பல புதிய பிரிவுகளை ஏற்படுத்தி, தாம் எவ்வாறு தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்த பாடுபட்டார் என்பக் கதையாக விவரிக்கிறார்.
இதன் மூலம் சமகாலத்தில் அரபு நாடுகளிலும் முஸ்லிம்களிடமும் பிற நாடுகளிலும் ஏகாதிபத்திய நாடுகள் செலுத்தும் ஆதிக்கத்தை நாம் புரிந்துகொள்ள இந்த நூல் உதவுகிறது. இதுவே பண்பாட்டு அரசியலில் அக்கறையுள்ளவர்கள் இந்த நூலைப் படிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
இதற்காக அவர் உஸ்மானியப் பேரரசுக்குள் எவ்வாறு ஒரு முஸ்லிமாக மாறுவேடத்தில் ஊடுருவினார். அங்கு அவர் கருத்துவேறுபாடுகளைக் கண்டறிதல், புதிய பிரிவுகளை ஊக்குவித்தல், ஆதரவளித்தல், அதில் அவர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்தல் போன்றவற்றின் மூலம் எவ்வாறு தமது பணியை மேற்கொண்டார் என்பதை இஸ்லாமியக் கோட்பாட்டு மொழியிலும் படைப்பூக்க நடையிலும் சித்திரிக்கிறார்.