பிரம்மாண்டமான சிந்தனையின் மாயாஜாலம்

பிரம்மாண்டமான சிந்தனையின் மாயாஜாலம்
தமிழில் - நாகலட்சுமி சண்முகம்
Tamil Translation of the classic bestseller "The Magic of Thinking Big"
டேவிட் ஷுவார்ட்ஸ் பிஎச்.டி யின் உலகெங்கும் விற்பனையில் மகத்தான சாதனைகள் புரிந்துள்ள "The Magic of Thinking Big" என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு.
அதிகப் பணம் சம்பாதிக்கவும், துணிச்சலுடன் தலைமையேற்று வழிநடத்தவும், மகிழ்ச்சியுடன் வாழவும் வழிகாட்டும் கையேடு.
இந்நூலில் பின்வரும் விஷயங்களை டாக்டர் ஷுவார்ட்ஸ் நமக்கு விலாவாரியாக விவரிக்கிறார்.
உங்கள் மனத்தை நேர்மறையான எண்ணங்களை உற்பத்தி செய்ய வைப்பது எப்படி?
மனத்தை முடக்கிப் போடுகின்ற பாரம்பரியச் சிந்தனையை எதிர்த்துப் போராடுவது எப்படி?
தொல்விக்கு வித்திடுகின்ற ‘சாக்குப்போக்கு’ எனும் நோய்க்கு எதிராக உங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி?
நீங்கள் யார்மீது தாக்கம் விளைவிக்க விரும்புகிறீர்களோ, அவர்களுடைய மனங்களைப் புரிந்து கொள்வதற்கான சக்தியை உங்களிடம் வளர்த்துக் கொள்வது எப்படி?
உரையாடலில் தாராள குணத்தைக் கடைபிடிப்பதன் மூலம் நண்பர்களை வென்றெடுப்பது எப்படி?
வெற்றியை உருவாக்கித் தரக்கூடிய ஒரு திடமான செயற்திட்டத்தை வகுப்பது எப்படி?