போதிசத்துவ வாழ்க்கை வழிகாட்டி

போதிசத்துவ வாழ்க்கை வழிகாட்டி
அனைத்து உயிர்களின் நலனுக்காகவும் மகிழ்ச்சிகாகாவும் சீரிய முறையில் உழைத்து வெற்றி காண்பதற்கு இன்றியமயாத தேவையாக உள்ள போதிசித்தம் பெறவேண்டும் என்று துணிவான எழுச்சியோடும் உறுதியோடும் கூடிய பேரார்வம் கொள்ளும் ஒரு மனிதரே போதிசத்துவர்.அதுவே அவரது வாழ்வின் உன்னதக் குறிக்கோள்.அத்தகைய போதிசத்துவரது வாழ்க்கை நெறியை விளக்குகின்றது இந்த அரிய நூல்.இந்துமத பரம்பரையில் எவ்வாறு பகவத்கீதை உபநிடதங்களில் அடங்கியுள்ள ஆழ்நத போதனைகளின் சாரமாகப் போற்றிப் பாராயணம் செய்யப்படுகின்றதோ,அவ்வாறே மஹாயான பெளத்தத்தில் சாந்திதேவராது போதிசர்யாவதாரம் புத்தருடைய போதனைகளின் சாரமாகப் பொற்றிப் பாராயணம் செய்யப்படுகின்றது. இது காலத்தை வெள்றத. எக்காலத்துக்கும் எல்லா மனித உயிர்களுக்கும் ஏற்ற அரிய செல்வக்குவியல் இது. வாழ்வின் உன்னதக் குறிக்கோளை அடைவதற்காக மேற்கொள்ளவேண்டிய தர்ம ஆன்மீகப் பயிற்சிகளை அழகுற விளக்கும் இந்த நூல் உலகின் தலையாய இலக்கியங்களில் முன்னணியில் இடம்பெற்றுள்ளத.இதுநாள்வரை தமிழில் வெளிவந்திராத இந்த அரிய நூலின் தமிழாக்கம் முதன்முறையாகத் தமிழ் பேசம் நல்லுலகத்துக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது