பைரவி பதில்கள்

பைரவி பதில்கள்
பெண்ணின் மனம், கடலை விடவும் ஆழமானது என்பார்கள் அனைத்தையும் விழுங்கக்கூடிய ஆற்றல், அடக்கிக்கொள்ளும் திறன் ,தேவையானால் சீறக்கூடிய சக்தி, எது தன்னில் கலந்தாலும் அதனால் தனது தன்மையை இழக்காத சுயம்,இதுதான் பெண்ணின் ஆழம்.
பெண்ணின் மெளனம் சிலநேரம் கேள்வியாகவும் சிலநேரம் விடையாகவும் ஒரு சில நேரம் சம்மதமாகவும் கருதப்படுகிறது ஆனால் ஒரு பெண்,வாய்திறந்து ஒரு கேள்வியைக் கேட்கும் போது உலகம் விழிப்பாய் இருக்கவேண்டியிருக்கிறது எங்கள் திரிசக்தி குழுமம் பெண்களுக்காகவே நடத்திவரும் "தேவதை" இதலில் வெளிவந்த "பைரவி பதில்கள்" மிகுந்த வரவேற்பைப் பெற்றுவிட்டது
பெண்களின் கேள்விகள்,பெண்களைப் பற்றிய கேள்விகள் இவற்றுக்கு விடைச்சொல்வது பெண்மனத்தாலன்றோ முடியும்? அதுதான் பைரவி பைரவி யார் என்றால் என்ன சொல்ல? அவள் துர்கை மட்டுமன்று: ஓர் இனிய ராகமும் கூட!