அய்யா வைகுண்டர்

அய்யா வைகுண்டர்
வெ.நீலகண்டன் அவர்கள் எழுதியது செந்துர்ர் கடற்கரையில் குவிந்திருந்த இத்தனை பேரும் அதிசயித்து நின்றனர்.வெயிலாள் பிரமை பிடித்தது போலானாள் .ஓடிச்சென்று அன்பு மகனே உன்று கட்டியழத் தோன்றியது. ஆனால் கடலுக்குள் இருந்து எழுந்து வந்த முத்துக்குட்டி முகத்தில் அம்மாவைப் பற்றிய தேடல்கள் இல்லை. அவர் முகம் முன்பைக் காட்டிலும் ஒளி பொருந்தியதாதாக மாறி இருந்தது. கரைக்கு வந்த முத்துக்குட்டி செந்தூர் முருகனைக் கைகூப்பி வணங்கினார். வெயிலான் முத்துகுட்டியைக் கட்டியணைத்து முகம் தடவி "மகனே... முத்துக்குட்டி " என்று கண்ணீர் வடித்தாள். அன்னையின் முகத்தில் வழிந்த கண்ணீரைத்துடைத்த முத்துக்குட்டி " அம்மா.. நான் இனிமேல் முத்துக்குட்டி இல்லை... வைகுண்டன் .இனிமேல் உனக்கு மட்டும் நானட மகனில்லை...உலகின் அத்தனை தாய்களுக்கும் மகன். நான் திருமாலின் அவதாரம். மக்களை வதைக்கும் கலி என்னும் நீசனை அழிக்க வந்த அவதாரம்"என்று உரைக்க வெயிரான் மட்டுமின்றி அத்தனை பேரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.