அதி உன்னத வழி
புத்தர் வாய்பாடுகள் மூலம் பற்றிப் பகவான் ஓஷா பேசுகிறார்.இந்த வாய்பாடு - 42அத்தியாயஙடகரளக் கொண்ட வாய்பாடு - இந்தியாவில் ஒருபோதும் சமஸ்கிருதத்தில் அல்லது பாலியில் இருந்ததில்லை.இது சீனமொழியில் மட்டும்தான் இருந்தது.ஹான் வம்சத்தின் ஒரு குறிப்பிட்ட சக்கரவர்த்தியாக மிஸ் , கி.மு.67ல் சீனாவிற்கு பெளத்த மதத்தின் ஆசான்களை அழைத்து அவர்களின் மூலமாகப் புத்தரின் செய்திகளைக் கொடுக்கச் செய்தார்.அந்தப் புத்த ஆசான்கள் பற்றி யாருக்கும் தெரியாது.ஆனால் ஒரு குழு அங்கு சென்றது.சீன மக்களுக்குப் புத்தரின் பொன்மொழிகளின் தொகுப்பாக ஒரு சிறு நூலைச் சீன மக்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பினார்.அது மிகவும் கடினமாக இருந்தது.முற்றிலும் ஒரு நாட்டிற்கு எதனை மொழிபெயர்ப்பது புத்தர் போன்று யாரும் இருந்திராத ஒரு நாட்டிற்காக எதை மொழிப்பெயர்த்து அளிப்பது?ஆகவே இந்தப் பெளத்த ஆசான்கள் 42 அத்தியாயங்கள் கொண்ட ஒரு சிறு தொகுப்பை அமைத்தார்கள்.அங்கும் இங்கும் இருந்த புத்தரின் பொன் மொழிகளையும் பல மறைநூல்களிலிருந்தும் பல கருத்துக்களை ஒன்றுதிரட்டித் தொகுத்தார்கள்.அதனால்தான் புத்தர் உலகிற்கு இது ஒரு புது அறிமுகம் ஆகும்.இது மிகவும் எளிமையானது.எல்லாவற்றையும் எளிமையான வழியில் உள்ளடக்கியுள்ளது.
அதி உன்னத வழி - Product Reviews
No reviews available