அறிவியல் கதைகள்

Price:
160.00
To order this product by phone : 73 73 73 77 42
அறிவியல் கதைகள்
அறிவியல் என்பது பெருங்கடல். சொல்லப்போனால், பல பெருங்கடல்களின் தொகுப்புதான் அது. அந்தக் கடல்களில் நுழைந்து, மகிழ்ச்சியாக நீச்சலடித்து, அலைகளின்மீது பெருமிதத்துடன் பயணம் செய்த பல வல்லுனர்களை இந்தப் புத்தகத்தில் நீங்கள் சந்திக்கலாம்.
அதே நேரம், 'அடடா, அறிவியலா?' என்று அஞ்சி ஒதுங்கவேண்டியதில்லை. பல அறிவியல் கண்டுபிடிப்புகளையும் அறிவியலாளர்களுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகளையும் எளிமையான மொழியில் சுவையாகச் சொல்லும் கதைகள் இவை. ரசித்துப் படிக்கலாம், பக்கத்துக்குப் பக்கம் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்!
'கோகுலம்' மாத இதழில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடரின் நூல் வடிவம் இது, அறிவியலின்மீது மாணவர்களுக்குப் பேரார்வத்தை உண்டாக்கும் சுவையான தொகுப்பு!