அரேபிய இரவுகளும் பகல்களும்
அரேபிய இரவுகளும் பகல்களும்
நாகிப் மாஃபாஸின் இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ் பெற்ற புராணிகமான "1001அரேபிய இரவுகள்' முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நாகிப் மாஃபஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார்.
“மாஃபஸின், "அரேபிய இரவுகளும் பகல்களும் அரசியல் சாயமும் ஆன்மிகச் சாயலும் கொண்ட மாயாஜாலக் கதைத் தொகுப்பு. அரேபிய இரவுகளை மாஃபஸ் மாற்றி எழுதுகிறார், அவரது ஷாரியர் நீதி, கருணை போன்றவற்றை மெதுவாக அறிந்து கொள்கிறார். மரணதேவதை, புராதனப் பொருட்கள் விற்கும் ஒரு வியாபாரி, வேதாளங்கள் விதியுடன் கண்ணாமூச்சி ஆடுகின்றன." என்று 'கதைசொல்லு அல்லது செத்துமடி' என்கிற தனது கட்டுரையில் புகழாரம் சூட்டுகிறார் சக எழுத்தாளர் ஏ.எஸ்,பையட்
"மூன்றாம் உலகத்திலிருந்து வருகிற ஒரு மனிதனுக்கு கதைகள் எழுத மன அமைதி எப்படிக் கிடைக்கும்? அதிருஷ்டவசமாக கலை தாராளமாகவும், கருணையோடும் இருக்கிறது. பிரச்சனைகளற்ற சந்தோஷங்களை மட்டும் கலை ஆகர்ஷிப்பதில்லை; துன்பத்தில் உழல்பவர்களை அது நிராகரித்து ஒதுக்குவதுமில்லை, அவரவர் நெஞ்சிற்குள் பொங்கும் உணர்வுகளை அவர்களுக்கே உரித்தானதொரு தனிமுறையில் வெளிப்படுத்திக் கொள்ள கலை அனுமதிக்கிறது." என்று தனது நோபல் பரிசு ஏற்புரையில் நாகிப் மாஃபஸ் குறிப்பிடுகிறார்.
அரேபிய இரவுகளும் பகல்களும் - Product Reviews
No reviews available