அன்பே ஆரமுதே
அன்பே ஆரமுதே
தடவையாவது நினைக்கிற ஒருவரிடம் எப்படிச் சொல்லாமலிருப்பது என்று புரியவில்லை. இல்லாவிட்டால் பெண்மனம் ஆறாது.” தி. ஜானகிராமன் நாவல்களில் மிகவும் ஜனரஞ்சகமானது ‘அன்பே ஆரமுதே’. வெகுஜன இதழில் தொடராக வெளிவந்த்தனால் மட்டுமல்ல; கதையோட்டத்தில் நிகழும் நாடகீயத் தருணங்கள் எதிர்பாரா சுவாரசியத்தைக் கொண்டிருப்பதும் காரணம். ஆன்மீக ஈடுபாடு முற்றிய அனந்தசாமி திருமண நாளன்று துறவறம் பூண்டு ஓடுகிறார். சந்நியாசியாக அலைகிறார் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதே மணப் பெண்ணிடம் வந்து சேர்கிறார். இந்தக் கால ஓட்டத்தில் நேரும் உளவியல் சிக்கல்களையும் உறவுப் பிணைப்புகளையும் சொல்கிறது நாவல். இளமையில் விலகிப்போன இருவர் முதுமையில் மணமுடிக்காத தம்பதியராகவும் பெறாத பெண்ணுக்குப் பெற்றோராகவும் மாறும் அதிசயமே கதையின் மையம். அதைக் கலைப் பண்புகள் துலங்க தி. ஜானகிராமனின் தேர்ந்த கை இழைத்திருக்கிறது. இன்று எழுதப்பட வேண்டிய கதையை அரை நூற்றாண்டுக்கு முன்னரே அவரது படைப்பு மனம் யோசித்திருக்கிறது. தி. ஜானகிராமன் தி. ஜானகிராமன் (1921 - 1982) தி. ஜானகிராமன் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். கர்நாடக இசை அறிவும் வடமொழிப் புலமையும் பெற்றிருந்தவர். 1943இல் எழுதத் தொடங்கிய தி. ஜானகிராமன் ‘மோகமுள்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’ உள்ளிட்ட ஒன்பது நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று நாடகங்கள், பயண நூல்கள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார். சிட்டியுடன் இணைந்து இவர் எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ பயண இலக்கிய வகையில் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. ‘மோகமுள்’, ‘நாலு வேலி நிலம்’ ஆகிய படைப்புகள் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. ‘மோகமுள்’, ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’ ஆகிய நாவல்களும் பல சிறுகதைகளும் இந்திய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 1979இல் ‘சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. பதிப்பாசிரியர்: சுகுமாரன் (பி.1957) கோவையில் பிறந்தவர். அச்சிதழ், தொலைக்காட்சி, நூல் வெளியீட்டுத் துறைகளில் பணியாற்றியவர். கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். இலக்கிய இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதிவருகிறார். திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்
அன்பே ஆரமுதே - Product Reviews
No reviews available